நாடு முழுவதும் வறட்சியான காலநிலை: குடிநீரின்றி 9,866 பேர் பாதிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2,351 குடும்பங்களைச் சேர்ந்த 7,053 பேர் வரட்சியினால் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மாவட்டத்தில் 576 குடும்பங்களைச் சேர்ந்த 2,813 பேர் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். (P)


Related Posts