பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 உணவுப் பொருட்களின் விலையை நேற்று (2) முதல் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 550 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாவினாலும், 320 ரூபாவாக இருந்த சின்ன வெங்காயம் 30 ரூபாவினாலும், 510 ரூபாவாக இருந்த கடலைப்பருப்பு கிலோ 16 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 16 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

935 ரூபாவாக இருந்த 400 கிராம் LSL பால் மா பாக்கெட் 10 ரூபாவாலும் 200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா 8 ரூபாவினாலும், 43 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 195 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 3 ரூபாவினாலும், 595 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோயா மிட் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது (P)


Related Posts