’பகிரங்க விவாதத்துக்குத் தயார்’

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 140 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, இடதுகரை தமிழ்க் கலவன் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என தற்போது சமூகத்தில் பேசப்படுகின்றது. இத்தகையதொரு விவாதம் நடக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பு என்பதால் பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்தவொரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக இருகின்றோம்.

அதேபோல், விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றார். (P)

முருகன் பயஸ் ஜெயக்குமார் விசாரணைகளின் பின் விடுவிப்பு | Thedipaar News

Related Posts