Font size:
Print
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது.
இதில், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது, அரச ஊழியர்கள் தற்போது பெரும் சம்பளத்துக்கு அதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, “அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (P)
அரசியலிலிருந்து ஓய்வு ; எண்ணம் கிடையாது! - மகிந்த ராஜபக்ச | Thedipaar NewsRelated Posts