ரொறன்ரோ மக்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் 2144ல் தான்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். 

வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.]

இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும். முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோவில் இன்றைய தினம் தென்படும் சூரிய கிரகணம் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பார்க்கக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவிதமான சூரிய கிரகணம் எதிர்வரும் 2144ம் ஆண்டில் மீண்டும் ரொறன்ரோவில் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 1925ம் ஆண்டில் இவ்வாறான பூரண சூரிய கிரகணம் ஒன்று ரொறன்ரோவில் தென்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பூரண சூரிய கிரகணம் ஒவ்வொரு பதினெட்டு மாதங்களுக்கு ஒரு தடவையும் நிகழும் என்ற போதிலும் ரொறன்ரோவில் மீண்டும் பூரண சூரிய கிரகணத்தை பார்வையிட 2144ம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணி முதல் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் எனவும், பிற்பகல் 3.18 மணிக்கு பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு பல்வேறு இடங்களிலிருந்தும் கனடாவிற்கு மக்கள் குழுமியுள்ளனர்.

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு | Thedipaar News

Related Posts