அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் தெரிந்த முழு சூரிய கிரகணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.

Related Posts