காலரா பரவல் புரளியால் 96 பேர் பலியான சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 96 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாட்டில் காலரா பரவுகிறது என தவறான தகவல் பரவிய நிலையில், மக்கள் அச்சமடைந்தனர். அது புரளி என தெரியாமல், அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் படகில் ஏறியுள்ளனர். ஆனால், படகில் போதிய இடவசதி இல்லாத சூழலில், கூட்ட நெருக்கடியால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உலகளவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் மொசாம்பிக்கில், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 15 ஆயிரம் காலரா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Posts