கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  இருந்து நேற்று முன்தினம்  (8) மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்களுக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது  ரோந்து வந்த இலங்கை கடற்படையானது  ஒரு விசைப்படகின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளது.

இதையடுத்து படகில் இருந்த தங்கம், நம்பேஸ்வரன், மெக்கானிக் உட்பட நான்கு மீனவர்கள் மீது கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த குறித்த மீனவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர்  வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

Related Posts