கூகுள் நிறுவனத்துக்கு 14 பில்லியன் ரூபாய் அபராதம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யுடியூப் காணொளிகளை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை நீக்க மறுத்தநிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு இலங்கை மதிப்பில் சுமார் 14 பில்லியன் ரூபாய் (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது. (P)


Related Posts