இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு ஹஜ் குழுவினால் வழங்கப்பட்ட 3500 கோட்டாக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி இடைநிறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு இலங்கைக்கு 3500 கோட்டா வழங்குவதற்கு சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு தீர்மானித்திருந்தது.
அதன் படி, நாட்டின் ஹஜ் முகவர்களுக்கு இலங்கையின் அரச ஹஜ் குழுவினால் கோட்டாக்களை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒதுக்கீட்டில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து முகவர் ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் கோட்டா வழங்கும் குறித்த செயன்முறையில் பெரும் தொகையான பணம் பரிமாறப்படுவதால் ஊழல் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என மனுதாரர் சந்தேகிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஹஜ் குழுவின் ஒதுக்கீடுகள் தொடர்பில் மனுதாார் கேள்வி எழுப்பிய பின்னர் தாம் தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யுனைடெட் டிரவல்ஸ் நிறுவனத்தை ஹஜ் முகவராக தற்காலிகமாக பதிவு செய்யவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் ஷானன் தில்கரத்ன ஆஜராகியிருந்ததுடன். இலங்கை ஹஜ் குழுவிற்காக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராகியிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. (P)
BJP Elon Musk | Thedipaar News