சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை இடம்பெறும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக,கடந்த 5ம் திகதி முதல் சுமார் 200 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு சிறப்பு போக்குவரத்து சேவையை ஆரபிக்கப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
இதேவேளை, நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்றும் 15ம் திகதிக்கும் இடையில் நெடுஞ்சாலைகளின் வருமானம் கணிசமான அளவு உயர்வாகவும் சாத்தியமாகுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில்,நீண்ட தூர புகையிரத சேவைகள் தவிர, கடந்த 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை 12 கூடுதல் புகையிரதங்கைள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி பதுளைக்கு 02 புகையிரதங்கள் பதுளையிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள், காலிக்கு 02 புகையிரதங்கள், காலியிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள், பெலியத்தவிற்கு 02 புகையிரதங்கள் மற்றும் பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள் என இந்த புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளது. (P)