நாட்டின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சியை எட்டும் : ஆசிய அபிவிருத்தி வங்கி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.m

நாட்டின் பொருளாதாரம் 2 வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையைக் காட்டுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 1.9 வீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக குறித்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்கள் பாராட்டத்தக்க நிலையில் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடினமான சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)

iPhone பயன்படுத்துபவர்கள் நஷ்டஈடு பெற முடியும் | Thedipaar News

Related Posts