கனேடிய தூதரக அலுவலகங்களில் இந்தியர்களுக்கு கட்டுப்பாடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கேற்ப இந்திய அலுவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தாங்கள் வருந்துவதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தில் செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்குமிடையிலான நீண்ட கால உறவைத் தொடரும் வகையில், இந்தியாவில் உள்ள கனேடியர்களுக்கு தூதரக ஆதரவு மற்றும் வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட முக்கிய சேவைகளை கனடா தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளார்.

BJP Elon Musk | Thedipaar News

Related Posts