சட்டத்தரணி நுவான் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட சட்டத்தரணி நுவான் டி சில்வாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இன்றைய விடுமுறை நாளில் (12/04/2024) பொது மக்கள் அவரது கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வாசஸ்தலத்தில் ஒன்று கூடினர்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நுவான் டி சில்வா…
“பொது மக்கள் நாட்டில் ஒரு மாற்றத்திற்காக ஆர்வமாக உள்ளனர், மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்றும் வெற்றி உறுதிசெய்யப்படும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.” என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் முன்னணியினர் தற்போது மேற்கொண்டு வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம், நாட்டில் தற்போது நிலவும் நிலைமை குறித்து விழிப்புடன் இருந்து சரியான போக்கை ஆதரிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

கூட்டத்தினைத் தொடர்ந்து, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கணக்கான அரிசிப் பொதிகளையும் கலந்துகொண்டவர்களுக்கு சட்டத்தரணி நுவான் டி சில்வா வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேற்கு கொழும்பு அமைப்பாளர் ஜீவக பெரேரா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்
வெள்ளவத்தை வடக்கு அமைப்பாளர் விஜயகுமாருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். (P)


Related Posts