ஒரே குடும்பத்தில் 350 வாக்களாளர்கள்! இந்தியாவில் அதிசயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அசாமில் உள்ள ஒரு குடும்பத்தில் மொத்தம் 350 வாக்காளர்கள் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் அந்த குடும்பத்தின் மேல் விழுந்துள்ளது.

சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ரங்கப்பாரா சட்டசபை தொகுதிக்குள் வரும் புலோகுரி நேபாளி பாம் நகரில் வசிக்கிறது ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம். 1,200 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் தான் அசாமில் மிக அதிக அளவிலான வாக்காளர்களை கொண்ட குடும்பம். ரான் பகதூர் தபாவுக்கு ஐந்து மனைவிகள் உள்ளனர். அத்துடன் 12 மகன்கள் மற்றும் 9 மகள்களும் உள்ளனர்.

இவருடைய குடும்பத்தில் உள்ள 1,200 பேரில், வரவுள்ள மக்களவைத் தேர்தலில் 350 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று ரான் பகதூர் தபாவின் மகன் சர்கி பகதூர் தபா கூறினார். 1997-ம் ஆண்டு ரான் பகதூர் காலமாகிவிட்ட நிலையில் ரான் பகதூருக்கு 150 பேரக்குழந்தைகள் உள்ளனர். 

எனினும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் நலத்திட்ட பலன்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று மகன் சர்கி பகதூர் கூறியுள்ளார். சர்கி பகதூர் தபாவுக்கு (64) மூன்று மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நாளும் வேளை தவறாமல் வந்து இவர்களிடம் வாக்கு கேட்டுச் செல்கின்றனர்.

Related Posts