இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழைமை (13) வான் வழித்தாக்குதலை நடத்திய நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் விஜயம் அமையவிருக்கின்றது. (P)


Related Posts