Font size:
Print
நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள நீர் மின் நிலையங்களை புதுப்பிக்க ஒன்ராறியோ மாகாணம் $1 பில்லியன் செலவழிக்கிறது.
எரிசக்தி அமைச்சர் டோட் ஸ்மித் கூறுகையில், புதுப்பித்தல் பணி மூலம் மின் உற்பத்தி நிலையங்களின் ஆயுளை 30 ஆண்டுகள் நீட்டிக்க முடியும்.
நயாகரா பகுதியில் உள்ள மற்ற இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் புதுப்பிக்கப்பட உள்ளது.
அடுத்த 15 ஆண்டுகள் இங்கே மின் உற்பத்தி பணிகள் நடைபெறும். இதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க மாகாணம் திட்டமிட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் ஒன்ராறியோவின் மின் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts