வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்றாலும் கூட தனது அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் சினிமாவில் வளர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்திற்கு கூட வனிதாவுக்கு அழைப்பு இல்லை. வனிதா தனி ஆளாக தான் நடிப்பு, youtube சேனல், துணிக்கடை பிஸ்னஸ் என பலவற்றை செய்து வருகிறார். அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களும் அதன் பின் பிரிந்துவிட்டனர்.வனிதாவின் மகள் ஜோவிகா கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அதன் பின் தற்போது ஜோவிகா படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று நன்றாக சம்பாதித்து வருகிறார்.
சென்னையில் சொந்தமாக வீடு, கார், துணிக்கடை என பயங்கரமாக செட்டில் ஆகிவிட்டார்.
வனிதா விஜயகுமார் தனியாளாக இதுவரை சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 7.3 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவர் கூட பிறந்த இவரது தங்கைகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி கூட இவர் அளவிற்கு வளரவில்லை.