தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமா விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே பயங்கரமாக கிசுகிசு பேசப்பட்டது, அதோடு இல்லாமல் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷிற்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாக கூட பேசப்பட்டது ஆனால், அதெல்லாம் உண்மையில்லை வெறும் வதந்தி மட்டுமே, அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டது.படங்களின் இசை வெளியிட்டு விழா அல்லது உறவினர்களின் திருமண நிகழ்வு என தனது கணவர் விஜய்யுடன் சென்று வருவார் சங்கீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரையும் ஒரே நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை. இதனாலேயே இந்த வதந்தி பெரிதானது. இந்த நிலையில், நேற்று நடந்த இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொண்டுள்ளார். பல வருடங்கள் கழித்து அவர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.