சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 452,979 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். (P)

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - தேர்வில் முதல் மதிப்பெண்! | Thedipaar News

Related Posts