கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் தற்போது பியுமி ஹன்சமாலி பயன்படுத்தி வருவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மகென் ரட்டட அமைப்பினால் இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சஞ்சய் மஹவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“தேர்தல் வெகு சீக்கிரமே வரும் போல இருக்கிறது. தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளின் மறைமுகமாக மறைத்திருக்கும் பணம் வெளிவரும். பியூமி ஹன்சமாலி மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. கோட்டாபயவின் ஜீப்பை பியூமி ஹன்சமாலி வாங்கியிருக்க வேண்டும் அல்லது பியூமி ஹன்சமாலி கோட்டாபயவிடம் கொடுத்திருக்க வேண்டும்.
எனவே, கோட்டாபயவின் ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எப்படி வாங்கினார் அல்லது கோட்டாபய அவருக்கு கொடுத்தாரா அல்லது அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் தேர்தலுக்கு அரசியல்வாதிகள் எப்படி பணம் செலவழிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க நடிகர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவு விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். (P)
குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - தேர்வில் முதல் மதிப்பெண்! | Thedipaar News