நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதன் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மே மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.
இதில் கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் நேர்காணலின் பின்னர் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக நிமால் விநாயகமூர்த்தி உறுதிப்படுத்தினார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு தான் போட்டியாளராக இருப்பதை தவிர்ப்பதற்காக தனது வேட்பு மனு தகுந்த காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் முதல் கனடிய அரசவை உறுப்பினராக இருந்த நிமால் விநாயகமூர்த்தி முன்னர் அமைச்சு பதவிகளையும் வகித்திருந்தார்.
மூன்றாவது பாராளுமன்ற அமர்வில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
நிமால் விநாயகமூர்த்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் உறுப்பினரும் நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளருமாவார்.
குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - தேர்வில் முதல் மதிப்பெண்! | Thedipaar News