இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவின் வடக்குப் பகுதியில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை ஐந்து முறை வெடித்து சிதறியுள்ளதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 11,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

2,378 அடி உயரத்திலுள்ள ருவாங் எரிமலை உள்ள பகுதியிலிருந்து குறைந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மைய காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts