மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கைத் தமிழர் கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே புதுப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற இடத்தில் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் ஆனந்த குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பணி முடிந்து முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிணமாகக் கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆனந்தகுமாரும் அவரது நண்பர் நாகராஜ் மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்பதும் மது போதையில் இருந்த நாகராஜ் துண்டை வைத்து, ஆனந்தகுமாரை கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய நாகராஜைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த நாகராஜை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மது போதையில் இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு கம்பங்களை துவம்சம் செய்த காட்டு யானை | Thedipaar News

Related Posts
©   Thedipaar

யாழில் வாள்வெட்டு