இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


எம்பிலிபிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தென்னை நார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அரலகங்வில பகுதியில் விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் முல்கல யாய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் 67 மற்றும் 47 வயதுடைய இருவர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (P)

வறட்சியால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Thedipaar News

Related Posts