ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களில் வரவேற்பு பதாகைகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print



அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. (P)

      


Related Posts