தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாளை தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ட்ரோன் மூலம் மருந்து விசுரும் நடவடிக்கை | Thedipaar News