இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 தமிழர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கை கடற்படையினர், ரோந்துக் கப்பலில் அங்கு வந்து, ராமேஸ்வரம் மீனவர்களின், இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு கூறி, 24 மீனவர்களையும் கைது செய்தனர். 

அதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், விசைப்படகுகள் ஆகியவை பறிமுதல் செய்து, இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்பு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை அடுத்து இலங்கையில் உள்ள, இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்த மாதம் ஏப்ரல் நான்காம் தேதி, இலங்கை நீதிமன்றம், இந்திய மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து தூதரக அதிகாரிகள், மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்டு, மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள் 24 மீனவர்களுக்கும், அவசரகால சான்றிதழ் வழங்கியது.

அதன்பின்பு, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 24 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் பெண்ணுக்கு தமிழகத்தில் கிடைத்த மறுவாழ்வு! | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்