நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது அமர்வுக்கான கனடா தேர்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது அமர்வுக்கான கனடா தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள்

. இம்முறை 7 இடங்களில் போட்டியிருப்பதாக கணிக்கப்பட்டது. இதன்படி

 1. பிரம்டன் வடக்கு

 2. மிசிசாகா கிழக்கு

 3. ரொரண்டோ, ஸ்காபரோ, பீச்சஸ்

 4. ஸ்காபரோ, சென்ரர் 

5. ரொராண்டோ ஸ்காபரோ-கிழக்கு

 6. ரொராண்டோ ஸ்காபரோ-வடக்கு

 7. பிக்கரிங், விற்பி. 

ஆகிய இடங்களே அவையாகும். தற்போது உள்ள நிலவரப்படி மிசிசாகா கிழக்கு வேட்பாளர் விஜயகுமாரி துரைராஜா தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளார். எனவே அங்கு தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் ரொரண்டோ ஸ்காபரோ பீச்சஸ் பகுதியிலுள்ள தேர்தல் வேட்பாளர்களில் கனகேந்திரன் கனகசபாபதி (ஈழவேந்தன் ஜயா) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் போட்டியிலிருந்து வெளியேற்றுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டதற்கிணங்க கனடா தேர்தல் ஆணையாளரால் அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு போட்டியிலிருந்து விலக்கி வைக்கவுள்ளார்.

 வாக்காளர்களின் தகுதி

வாக்காளர்களின் தகுதி நிலையை கருத்தில் எடுத்து 17 வயது பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தும் முகமாக ஆள் அடையாள சான்று, இருப்பிடத்தை உறுதிசெய்ய அஞ்சல் குறியீடு உள்ள அட்டை அல்லது ஆவணம் கொண்டு சென்று வாக்களிக்கலாம். 

வேட்பாளரின் பரப்புரைகள் 

வேட்பாளர்கள் தேர்தல் நடைமுறைக்கையேட்டில் கூறியபடி போட்டிவேட்பாளரின் பரப்புரைக்கு குந்தகம் ஏற்படாமல் பரப்புரை, விளம்பரம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பரப்புரையிள் போது ஏற்படும் பிரச்சனைகளை தேர்தல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

 வாக்களிப்பு நிலையம் 

வாக்களிப்பு நிலையத்தில் அமைதியையும் பண்பையும் கடைப்பிடிப்பது சிறப்பு. வேட்பாளர்களின் பிரதிநிதி தலா ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் நிற்க அனுமதி உண்டு. வேட்பாளரின் பிரதிநிதி தொடர்பான விபரத்தை ஆணையாளருக்கு எழுத்தில் வேட்பாளரினால் அனுப்பப்படல் வேண்டும். ஊடகத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் நிகழ்வை பதிவுசெய்ய அனுமதிக்கப்படுவர். வாக்களிக்கும் நேரம் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை என முடிவு செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் தொகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தமது வரலாற்று கடமையாக வாக்குகளை உங்கள் வேட்பாளர்களுக்கு செலுத்த வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் பதில் ஆனையாளர்கள் இவற்றை கண்காணித்து வழிப்படுத்தி தலைமைத்தேர்தல் ஆணையாளருடன் தொடர்பில் இருந்தபடி பிணக்குகள் ஏதும் வரும் இடத்து அவற்றை தீர்த்து வைப்பார்கள். வாக்களிப்பு முடிந்த பின் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பு அலுவலர்களுடன் பாதுகாப்பாக தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் குறித்த இடங்களில் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவர். தேர்தலின் வெற்றியாளர்கள் மே-5 அன்றே தேர்தல் ஆணையத்தால் வெளிப்படுத்தப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையம் கனடா 437-265-8483

 TGTE பற்றி:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) என்பது உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். 2010 இல் ஸ்தாபிக்கப்பட்ட TGTE ஆனது இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை நோக்கிச் செயற்படுகிறது.

 ஊடகத் தொடர்பு:- பிரதாப் கிட்னபிள்ளை, செய்தித்தொடர்பாளர் TGTE தேர்தல் ஆணையம் - கனடா 437-246-9043

BRAMPTOM
DURHAM
SCARBOROUGH  CENTER   17
SCARBOROUGH NORTH 19


SCARBOROUGH EAST 18

மட்டக்களப்பு  மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை | Thedipaar News

Related Posts