அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹமாஸ்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையேயான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், பணய கைதிகளை மீட்கும் தீவிர முயற்சியாக காசாவின் ரபா நகரை தரை வழியே முற்றுகையிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. நிதியுதவியும் அளித்து வருகிறது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த முன்வந்துள்ளனர்.

அவர்கள், கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலான ஆண்டிரோமெடா ஸ்டார் என்ற கப்பலை தாக்கினர். இதில், கப்பல் சிறிய அளவில் பாதிப்படைந்தது. செங்கடலில் நடந்த இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

இதனை தொடர்ந்து கடல் பகுதியில் தாக்குதலை முறியடிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஏமன் நாட்டிற்கு உள்ளே எம்.கியூ.-9 ரீப்பர் வகை ஆளில்லா விமானம் ஒன்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

ஏமன் நாட்டின் வான்வெளி பகுதியில், அமெரிக்க ராணுவம் இயக்கிய இந்த ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்த போது, சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுபற்றி அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்