கட்டிய வீட்டை கொடுங்க: இலங்கை தமிழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு உத்தரவின் படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் பகுதியில் உள்ள முகாமிடத்தை சீரமைத்து மொத்தம் 112 வீடுகள் கட்டப்பட்டன. 

இந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர் இந்த நிலையில் தற்பொழுது 12 குடும்பங்களுக்கு மட்டும் அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது மீதம் இருந்த 15 குடும்பங்களுக்கு ஆழியார் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டது. 

தற்பொழுது அதன் திறப்பு விழாவும் முடிவடைந்து விட்டது இந்த நிலையில் அந்த 15 குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் ஒதுக்கி தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதற்கு மின்சார வசதி செய்யவில்லை என்பது போன்ற பல காரணங்களை கூறுகின்றனர் எந்த நிலையில் அந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளனர்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹமாஸ் | Thedipaar News

Related Posts