24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்த ஜோ பைடன் வளர்ப்பு நாய்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2 வயதே ஆன அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய், 24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்துள்ளதாக புகார் எழுந்ததால் கடந்தாண்டு இறுதியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் துணை அதிபராக்கப்படுவார் என பேசப்படும் கிறிஸ்டி நோம், ஒரு வயதான தனது வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்ததால் சுட்டுக்கொன்றதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இப்போது ஜோ பைடனின் வளர்ப்பு நாயும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Posts