என்னய்யா இது? கிடுகிடுவென உயர்ந்த முத்திரை கட்டணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்துக்குத் தேவையான வரியைப் பெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் முத்திரை கட்டணம் பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியாகி உள்ளது. 

தத்து ஆவணங்களுக்கு ரூ .100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரிப்பு டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்வு. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கமெண்ட் செய்த நெட்டிசன்கள், பத்திரம் எழுதறவனிடம் தான் கமிஷன் கொடுக்க வேண்டும். அவர் சரி என்றால் மட்டும் தான் பத்திரம் பதிவு செய்கிறார் சார் பதிவாளர். கமிஷன் என்றால் லஞ்சம். ஒருநாள் முழுக்க ஆபிசில் அலைபவர்களுக்கு இந்த உண்மை புரியும் என்கிறார்கள்

Related Posts