யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாக படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம்.
இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
மே மாதம் 10ஆம் திகதி இலங்கையில், யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை உள்ளிட்ட பல திரையரங்குகளில் திரையிடவுள்ளோம். அதேவேளை 10ஆம் திகதியே கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற 11 நாடுகளில் 70 திரையரங்குகளில் திரையிடவுள்ளோம் என தெரிவித்தார்.
இப்போது "ஊழி" திரைப்படம் 11 நாடுகளில் உலகம் முழுவதும் 27 திரையரங்குகளில் மொத்தம் 81 காட்சிகளுடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கவனயீர்ப்பு | Thedipaar News