குடையை எடுத்து ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் கொட்டி தீர்க்க உள்ள மழை!குடையை எடுத்து ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் கொட்டி தீர்க்க உள்ள மழை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 15ஆம் தேதி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Related Posts