தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் விவாகரத்து உண்மையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோன். இவர் கடந்த 2018 -ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். ஏனெனில் இவர்கள் இருவருமே பாலிவுட் சினிமாவில் டாப் நடிகர்கள். சமீபத்தில் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தங்களது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார். 

இதனால், ரன்வீர் தீபிகா படுகோனை விவாகரத்து செய்யப்போகிறாரா? என்று கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. தற்போது ரன்வீர் சிங், கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே கையை பிடித்தபடி ஒரு புகைப்படம் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மற்ற நடிகைகளை போல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தானாகவே பெற்றுக்கொள்கிறார் தீபிகா. என்னதான் தான் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தாலும் கூட, தானாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்க தக்கதாக மாறியுள்ளது.

Related Posts