யாழில் வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மீட்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படைத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தேவைக்கு குறித்த வெடிபொருட்கள் உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு | Thedipaar News

Related Posts