ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமரான 59 வயதான ராபர்ட் ஃபிக்கோ மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தனது ஆதரவாளர்களிடையே பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ உரையாற்றிக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அப்போது அவரை நோக்கி ஒருவர் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் இதில் ஃபிக்கோவின் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதில் படுகாயமடைந்த பிரதமர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் நாட்டில் பரப்பப்படும் வெறுப்புணர்வே இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஜுவானா கேபுடோவா தெரிவித்துள்ளார்.