குற்றால அருவியில் திடீர் வெள்ளம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயமானார். 

சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts