பீல் பகுதியில் $37,000 டெபாசிட் தொகையுடன் ஓடிய ஒப்பந்ததாரர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பீல் பிராந்திய பொலிசார் 23 வயதான ரொறன்ரோ நபரை கைது செய்துள்ளனர்.  ஏப்ரல் 2023 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் பீலில் வசிப்பவர்கள் இவரிடம் வீடுகளை சீரமைக்க ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். 

TRT மேசன்ரி & ஜெனரல் கான்ட்ராக்டிங் என்ற நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிய அவர் $37,000 டெபாசிட்களை வாங்கியுள்ளார். பணம் வாங்கிய பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை என போலீஸார் கூறுகின்றனர்.

மே 16 அன்று போலீசார் டிரிஸ்டன் டார்னோசி என்ற சந்தேக நபரை கைது செய்து, பொதுமக்களை ஏமாற்றியதாகவும், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை உடைமையாக்கியதாகவும் குற்றம் சாட்டினர்.

 எந்த இடத்திலும் அவர் சேவையை வழங்கவோ அல்லது வைப்புத்தொகையை திருப்பித் தரவோ இல்லை. மக்களை ஏமாற்றி உள்ளார் என போலீசார் கூறினர். 

Related Posts