தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறைவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தியோ நகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும்  இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வெளியிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (26) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் குறித்த  வீதியூடாகவே குறித்த கிராம மக்கள்  மீன்பிடிக்குச்செல்வது வழக்கமானதாகும்.

 இந்நிலையில்  நேற்று முன் தினம்   மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வீதியினது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனையடுத்து   மக்கள் கிராம மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள் வேலிகளை அகற்றியிருந்தனர்.

 குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள  தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக  அப்பகுதி மீனவர்களுக்கு தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், குறித்த கிராம மக்களின் மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும்  தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை  தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அப்பகுதி மக்கள்  குற்றஞ்சாடியிருந்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று (27.05.2024) பிரதேச செயலக அதிகாரிகளும், பிரதேச சபை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் அடிப்படையில் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் இன்றுடன் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் தீர்வு கிடைக்காவிட்டால் இரு வாரங்களின் பின்னர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள்  நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து தீர்வினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வீதி மறிக்கப்பட்டதை கண்டித்து தியோநகர் மீனவர்கள் தொடர் போராட்டம் | Thedipaar News

Related Posts