இலங்கையை சூழ சிவப்பு அபாய எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை  விடுத்துள்ளது.

இன்று (28) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அந்த பிரதேசங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரை,  மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஏனைய கடற்பரப்புகளில் கடல் அலையானது 2.5 – 3 மீற்றர் வரை உயரலாம் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (P)

ஆன்லைனில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் | Thedipaar News

Related Posts