Font size:
Print
தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சமந்தாவிற்கு நெஞ்சழுத்தம்? | Samantha | Naga Chaitanya | Thedipaar News
Related Posts