தமிழகத்துக்கு அகதியாக சென்ற முல்லைத்தீவு குடும்பம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை முல்லைத்தீவு இந்துப்புரம், முருகண்டியைச்சேர்ந்த சிவராஜா என்ற சிவா (45) இந்தியா செல்ல முடிவுசெய்து தனது மனைவி ஜெயகௌரி என்ற கௌரி (45) மகள்கள் கீர்த்தனா (16), ஆர்த்தி (14), சங்கவி (09), மகன் சஞ்சய் (11), ஆகிய 6 பேரும் அங்கிருந்து மன்னார் வந்தனர். 

மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வருவதற்காக மன்னாரைச் சேர்ந்த ரகு என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் கொடுத்து கள்ளத்தனமாக ரகுவின் படகின் மூலம் மன்னாரில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். 

 தகவலறிந்து விரைந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இலங்கைத் தமிழர்கள் 6 பேரையும் மண்டபம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்

Related Posts