ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவு! இனி மோடி தான்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாஜகவுக்கு இந்த முறை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் அரசியல் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைமையில் NDA கூட்டணி ஆட்சியமைக்க நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்கள் ஆதரவு கடிதங்களை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சி எம்பிக்கள் என 10 எம்பிக்கள் NDA கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கண்டுகொள்ளாத பாலிவுட் | அடம்பிடிக்கும் ஜோதிகா | jyothika | Thedipaar News

Related Posts