ஒன்ராறியோவில் இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில், குடியிருப்புவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின், குடியிருப்புவசதி இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 15 மில்லியன் மக்கள் வாழும் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது தமிழ் அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் தொடர்ந்து விளங்குகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் அமைச்சர் போல் கலண்ட்ரா ஆகியோருடன் இணைந்து ஒன்ராறியோ வாழ் மக்களுக்காக பணியாற்றுவதற்கு குடியிருப்புவசதி இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமை கொள்கிறேன்.

 இத்தருணத்தில், என் தொகுதியாகிய ஸ்காபரோ - றூஜ் பார்க்கிலுள்ள மக்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


=

Related Posts