கனடாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு கமிட்டி கனடாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான் என கூறியுள்ளது. 

கனேடிய ஜனநாயகத்தின் முதல் அச்சுறுத்தலாக சீனா விளங்குவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இரண்டாவது இடத்தில் முன்பு ரஷ்யா இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுதல், கனேடிய அரசியல்வாதிகள், இன அடிப்படையிலான ஊடகங்கள் மற்றும் இந்திய கனேடிய இன கலாச்சார சமுதாயங்களை குறிவைத்தல் ஆகிய விடயங்கள் மூலம் இந்தியா இந்த செயல்களைச் செய்வதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில் இந்த அறிக்கைக்கு இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

Related Posts