முதுகுக்குள் ஊசியை வைத்து தைத்து அனுப்பிய கனேடிய மருத்துவமனை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒன்ராறியோவைச் சேர்ந்த Giovanna Ippolito, தோள் மற்றும் கால்வலியால் தவித்துவந்துள்ளார். அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் ஒரு பெரிய துண்டு இருப்பது தெரியவந்தது. அந்த ஊசியுடனேயே அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார். அத்துடன், அந்த ஊசிதான் தனது தோள் மற்றும் கால்வலிக்கும் காரணம் என்பது அவருக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது.

Giovannaவின் மருத்துவர் தவறுதலாக ஊசியை அவரது முதுகெலும்பில் விட்டுவிட்டார் என தெரியவந்துள்ளது.  Giovanna புகாரளித்தும் மருத்துவ அமைப்பு முறையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தனது இரண்டு பிள்ளைகளும் பிறக்கும்போது, முதுகெலும்பில் ஊசிபோட்டபோது இந்த தவறு நடந்திருக்கலாம் என கருதுகிறார் Giovanna. 

ஆனால், அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. என்றாலும், பதில் கிடைக்காமல் விடப்போவதில்லை என போராடி வரும் Giovanna, ஆறு ஆண்டுகளாக பதிலுக்காக காத்திருக்கிறார்.

Related Posts