அந்த 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகம், மேற்கு வங்காளம் உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 13 தொகுதிகளுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி, பீகாரில் உள்ள ரூபாலி, ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தாலா (மேற்கு வங்காளம்), இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நலகர், டேரா, ஹமிர்பூர், பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதி, உத்தரகாண்டில் உள்ள மங்களூரு மற்றும் பத்ரிநாத், மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா ஆகிய 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Related Posts