கனடாவில் கியா வாகனங்கள் குறித்த அவசர எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Kia Telluride SUV வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரக வாகனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சுமார் 20563 Telluride SUV ரக வாகனங்கள் இந்த கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. கடந்த 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இந்த மாடல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

வாகனங்கள் பழுது பார்க்கப்படும் வரையில் வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்துமாறும் அருகாமையில் வேறு வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த வாகனங்களை வைத்திருப்போருக்கு கியா நிறுவனம் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களை கியா விநியோகத்தர்களிடம் கொடுத்து பழுது பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts